நயன்தாரா நடந்தால் நளினம்.. சிரித்தால் சிலிர்ப்பு.. நச்சுன்னு நடு வகிடு.. மெல்லிசா ஒரு புருவம்.. ஒரு காலத்தில் நயன்தாரா மாடலிங் செய்து கொண்டியிருந்த போது, தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். அப்போது, நயன்தாரா நடு வகிடெடுத்த தலை முடி, மெல்லிய புருவம், பொட்டு வைத்து கொண்டு அம்சமாக இருப்பார். அவரது மாடலிங் காலத்தில் நிறைய நகைகளை அணிந்து கொண்டும், உடல் ஒட்டிய ஆடைகளை அணிந்து கொண்டும், மெருன் கலர் லிப்ஸ்டிக் போட்டும் தனது தோற்றத்துக்கு மெருகூட்டி பார்ப்பவர்களை கிறங்கடித்தார். பக்கத்து வீட்டு பெண் போல.. மாடலிங்கில் கலக்கிய பின்னர் நயன்தாரா 2000 ஆண்டு சினிமாவில் நுழைந்தார். அப்போது, முதல் படமே கிராமத்து கதைதான். தோள்வரை முடி நீண்டு கிடக்க, பக்கா கிராமத்து பெண்ணாக காட்சியளித்தார். முதல் படத்தில் அவர் அணிந்த குர்தா செட், மற்றும் துப்பட்டா மாடல் பிரபலமானது. அதுமட்டுமல்லாமல், நயன்தாரா அணிந்து கொண்ட பிளவுஸ் டாப்ஸ், ஸ்லிம்-பிட் ஜீன்ஸ், காதணிகள், நெக்லஸ் அனைத்தும் டிரெண்டானது. இழுத்து வாரிய கேசம், அவுட் லைன் உதடுகள் ஹாலிவுட்டின் பிரபல நடிகை கைலி ஜென்னர். இவர...