இன்று பிறந்த நாள்: நயன்தாரா அழகின் பரிணாம வளர்ச்சி (18/11/2021)
நயன்தாரா நடந்தால் நளினம்.. சிரித்தால் சிலிர்ப்பு.. நச்சுன்னு நடு வகிடு.. மெல்லிசா ஒரு புருவம்..
ஒரு காலத்தில் நயன்தாரா மாடலிங் செய்து கொண்டியிருந்த போது, தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். அப்போது, நயன்தாரா நடு வகிடெடுத்த தலை முடி, மெல்லிய புருவம், பொட்டு வைத்து கொண்டு அம்சமாக இருப்பார். அவரது மாடலிங் காலத்தில் நிறைய நகைகளை அணிந்து கொண்டும், உடல் ஒட்டிய ஆடைகளை அணிந்து கொண்டும், மெருன் கலர் லிப்ஸ்டிக் போட்டும் தனது தோற்றத்துக்கு மெருகூட்டி பார்ப்பவர்களை கிறங்கடித்தார்.
பக்கத்து வீட்டு பெண் போல..
மாடலிங்கில் கலக்கிய பின்னர் நயன்தாரா 2000 ஆண்டு சினிமாவில் நுழைந்தார். அப்போது, முதல் படமே கிராமத்து கதைதான். தோள்வரை முடி நீண்டு கிடக்க, பக்கா கிராமத்து பெண்ணாக காட்சியளித்தார். முதல் படத்தில் அவர் அணிந்த குர்தா செட், மற்றும் துப்பட்டா மாடல் பிரபலமானது. அதுமட்டுமல்லாமல், நயன்தாரா அணிந்து கொண்ட பிளவுஸ் டாப்ஸ், ஸ்லிம்-பிட் ஜீன்ஸ், காதணிகள், நெக்லஸ் அனைத்தும் டிரெண்டானது.
இழுத்து வாரிய கேசம், அவுட் லைன் உதடுகள்
ஹாலிவுட்டின் பிரபல நடிகை கைலி ஜென்னர். இவர் தன்னுடைய உதடுகளை மேலும் அழகாக காட்ட, உதட்டின் மேல், மேலோட்டமான அவுட் லைன் வரைந்து தன்னுடைய உதடுகளை அழகாக காட்டுவது வழக்கம். அதன் பிறகு இந்த டிரண்டை தமிழ் சினிமாவில் ஆரம்பித்து வைத்தவர் நயன்தாராதான். ஜென்னரைப் போலவே தனது உதடுகளையும் அழகாக காட்ட உதடின்மேல் அவுட் லைன் செய்து கொண்டு, சூப்பர் ஸ்டார் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் தன்னுடைய புதிய தோற்றத்தை வெளிக்காட்டினார். சும்மாவே அள்ளும் அழகு அவருக்கு.. அவுட்லைன் போட்டதும், ரசிகர்களின் லைப்லைன் வேற லெவலுக்கு எகிறியது.
கழுத்தைச் சுற்றிய பிளவுஸ், கண்ணைப் பறிக்கும் சேலை
இதுவரை கிராமத்து பெண்ணாகவே நடித்து வந்த நயன்தார சந்திரமுகி படத்திற்கு பிறகு தைரியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். ‘தஸ்கரவீரன்’ படத்தில் நடித்த நயன்தாரா ஸ்டைலான புடவை, ஹால்டர் நெக் பிளவுஸ்களில் மாறுபட்ட பார்டர்கள், ஸ்டைலான காதணிகள், அணிந்து கொண்டு கலக்கியிருப்பார். இந்த ஸ்டைலை ரசிகர்கள் டிரண்டாக்கினார்கள்.
வெள்ளி மூக்குத்தி , வில் புருவம், அலை அலையாய் கேசங்கள்
கஜினி படத்தில் நயன்தாரவின் தோற்றம் மிக கவர்ச்சியாக காட்டப்பட்டது. படத்தில் நயன்தாரா அதிக மார்டன் உடைகளை அணிந்து கொண்டார். இந்த ரசனை மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. இதில் வரும் நயன்தாராவின் பாடல் ஒன்று மிக கவர்ச்சியாக காட்டப்பட்டது. அதில் அவர் லெதர் கிராப் டாப், ஷார்ட்ஸை அணிந்து இருப்பார். கண்களை மேலும் அழகூட்ட சிறகுகள் கொண்ட ஐலைனர், நீண்ட வளையங்கள், சில்வர் மூக்கு முள் மற்றும் அலை அலையான ஈரமான கூந்தல் தோற்றத்தில் ஜிவ்வென்றிருந்தார்.
நீளமாக இழுத்து வாரிய தலை முடி, ஜிமிக்கி மினுமினுக்கும் சேலை
அடுத்து ‘’ லட்சுமி’’ என்ற தெலுங்கு படத்தில் நயன்தாரா மிகவும் தைரியாமான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் நீளமாக இழுத்து வாரிய தலை முடியுடன் "கிச்"சென காட்சியளித்தார். இதனை கல்லூரி மாணவிகள் அனைவரும் நயன்தாரவின் ஸ்டைலை காப்பி அடிக்கும் அளவுக்கு அதகளமாக இருந்தது அந்த ஸ்டைல்.
சைடில் வாரி விட்ட தலை முடி, உடலை ஒட்டிய ஆடை
நயன்தாராவின் வாழ்க்கையிலும் சரி, சினிமா துறையிலும் சரி தன்னை எப்பொழுதும் தனித்துவமாகவே காட்டி கொள்வார். தல அஜித் நடித்த ‘’பில்லா’’ படத்த்திற்கு நயன்தாரா தனது உடலை எடையை குறைத்து கொண்டு பிகினி உடை மற்றும் பாடிகான் உடையை அணிந்து கொண்டு நடித்தார். அதிலும், அந்த கருப்பு சன்கிளாஸ்கள் ஒரு டிரெண்ட்செட்டராக மாறியது.
எடுப்பான மூக்குத்தி, வெள்ளி அருவி போல தலை முடி
2000 களின் நயன்தாரா தனது நீண்ட மென்மையான கூந்தலைத் தழுவியதைக் காண முடிந்தது. தொடர்ந்து, அவரது மேக்கப்பில் நிறைய ஹைலைட்டர்களையும் சேர்க்க தொடங்கினார். திரைக்கு வெளியேயும் அவர் மூக்குத்தி அணிய தொடங்கினார். அதிகமாக சிவப்பு, ஆரஞ்சு மற்றும் ரோஸ் போன்ற அடிக்கும் நிறங்களில் ஆடைகள் அணிந்தார். மார்டன் உடைகளை அணிந்து வந்தார்.
தூக்கிக் கட்டிய போனிடைல், கலர் அடிச்ச கலக்கல் தலைமுடி
நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு டிரண்டாகவே இருப்பார். 2010க்கு பிறகு அவர் தனது தலைமுடியில் கவனம் செலுத்த தொடங்கினார். ‘பாடிகார்ட்’ படத்தில் வண்ண முடி நீட்டிப்புகள் மற்றும் ஜடைகள் மற்றும் உயர் போனிடெயில் சிகை அலங்காரங்களை செய்திருப்பார். அப்போது, அவர் அணிந்து கொண்ட டெனிம் பேண்ட்டும் டிரெண்டாக மாறியது.
Comments
Post a Comment